கொரோனா வைரஸ் பரவும் அபாயம்…பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

  0
  8
  delhi

  சீனா தவிர்த்து கொரோனா வைரஸ் பரவக் கூடிய அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

  பெய்ஜிங்: சீனா தவிர்த்து கொரோனா வைரஸ் பரவக் கூடிய அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தங்களுடைய நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு வந்து விடக் கூடாது என எல்லா நாடுகளுமே மிகவும் அதிக அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ttn

  இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் தொடர்பாக ஜெர்மனியின் ஹம்போல்ட் பல்கலைக் கழகம் மற்றும் ராபர்ட் கோச் நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது. இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வின் படி கொரோனா வைரஸ் பரவக் கூடிய அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது. மேலும் சீனா தவிர்த்து தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உள்பட 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாகவே மேற்கண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.