கொரோனா வைரஸ் நெருக்கடி….. திறம்பட கையாளுகிறது மோடி அரசாங்கம்….. 83 சதவீத மக்கள் நம்பிக்கை

  0
  2
  பிரதமர் மோடி

  கொரோனா வைரஸ் நெருக்கடியை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் திறம்பட கையாளுகிறது என 83 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் நம்புவதாக அண்மையில் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

  ஐ.ஏ.என்.எஸ்.-சிவோட்டர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கோவிட்-19 அலை 2 என்ற பெயரில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் நெருக்கடியை மோடி அரசு திறம்பட கையாளுவதாக தெரிவித்துள்ளனர்.

  கொரோனா வைரஸ்

  கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 83.5 சதவீதம் பேர்  கொரோனா வைரசுக்கு எதிரான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் 66.4 சதவீதம் பேர் மோடி அரசின் நடவடிக்கைகள் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். 17.1 சதவீதம் பேர் மோடி அரசின் நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

  லாக் டவுன்

  அதேசமயம் கொரோனா வைரசுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை என 9.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு மார்ச் 26-27ம் தேதிகளில் நடைபெற்றது.