கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி கொடுங்க….. காங்கிரஸ் கோரிக்கை

  0
  1
  காங்கிரஸ்

  கொரோனா வைரஸால் ஏற்பட்டுள் நெருக்கடிகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

  கொரோனா வைரஸால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மாநில அரசுகள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ள மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதிகேட்டன. மத்திய அரசும் நிதி கொடுத்தது. ஆனால் அது யானை பசிக்கு சோளப்பூரி கொடுத்த கதையாக இருந்தது.

  காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுப்ரியா

  இந்நிலையில், கொரோனா வைரஸால் நெருக்கடிகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

  நிதியுதவி

  கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மாநிலங்கள் எதிர்கொள்ள குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார பேக்கேஜ் உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மாநிலங்களின் ஜி.எஸ்.டி. பங்கை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.