கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் – விழிப்புணர்வு வீடியோவில் அமிதாப் பச்சன்

  0
  2
  coronavirus

  கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அமிதாப் பச்சன் விழிப்புணர்வு வீடியோவில் கூறியுள்ளார்.

  மும்பை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அமிதாப் பச்சன் விழிப்புணர்வு வீடியோவில் கூறியுள்ளார்.

  இந்தியாவில் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு பொது பாதுகாப்பு வீடியோவில் தோன்றியுள்ளார். இந்தியாவில் 125 பேரை பாதித்த கொரோனா வைரஸ்க்கு எதிராக ஒருவர் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் வேண்டும் என்ற வழிகளை அந்த வீடியோவில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

  அதில் “நாம் ஒன்றிணைந்தால் கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சில முன்னெச்சரிக்கை வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்என்று தொடங்கும் அமிதாப் பச்சன் அதையடுத்து வழிமுறைகளை விளக்குகிறார். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அமிதாப் ஏற்கனவே இரண்டு அனிமேஷன் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் என்பதும், மேலும் இன்ஸ்டாகிராமில் ஒரு கவிதையையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.