கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி.. கண்டுபிடித்து அசத்தும் சென்னை மாணவர்கள்!

  0
  2
  students

  கொரோனா வைரஸ் அடுத்தவர்களைத் தொடுவது மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது.

  கொரோனா வைரஸ் அடுத்தவர்களைத் தொடுவது மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தி விற்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லூரி மாணவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

  ttn

  கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தா மணி தலைமையில் , மாணவர்கள் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருக்கும்  நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி தான் தயாரித்தோம் என்று வசந்தா மணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த கிருமி  நாசினி தயாரிக்க 100 ரூபாய் தான் ஆகும் என்று கூறிய அக்கல்லூரி முதல்வர் , வெளிக்கடைகளில் அது ரூ.300 முதல் 500 வரை விற்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.