கொரோனா வைரஸால் தயாரிப்பு ஆலைகளை இழுத்து மூடிய மாருதி சுசுகி……

  0
  3
  மாருதி சுசுகி ஆலை

  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், அரியானாவில் உள்ள தனது 2 ஆலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  நம் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அரியானாவில் உள்ள அந்நிறுவனத்தின் 2 ஆலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் நேற்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

  மாருதி சுசுகி உற்பத்தி ஆலை

  சானிடைசன், சுத்தம், வெப்பநிலை சோதனைகள், நேரடி தொடர்புகளை குறைத்தல், வீடியோ கான்பரன்சிங்கை அதிகரித்தல், பணியாளர்கள் பயணத்துக்கு தடை மற்றும் பணியாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் தொலைவு ஆலோசகர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பாக அரசின் உத்தரவுகளை மாருதி சுசுகி இந்தியா பின்பற்றி வருகிறது.

  மாருதி சுசுகி ஆலை

  தற்போது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என அரசின் கொள்கையின்படி, நிறுவனம் தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு எடுத்துள்ளது. அரியானாவில் குர்கிராம் மற்றும் மனேசரில் உள்ள ஆலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இது அமலுக்கு வருகிறது ரோஹ்தக்கில் உள்ள ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையமும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.