கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

  0
  4
  hospital

  கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி பிரிவில் கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது நபர் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அவர் கடந்த 3 ஆம் தேதி குவைத் சென்று திரும்பியிருக்கிறார். 

  ttn

  அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. அவருக்கு கொரோனா இருக்கலாம் என்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில். அவர் எப்படி உயிரிழந்தார் என குழப்பம் நிலவி வருகிறது. அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு  தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தால் தான் அவர் எப்படி உயிரிழந்தார் என்று தெரிய வரும்.