கொரோனா ரூபத்தில் உலாவும் எமன்! போலீசாரின் வித்தியாசமான விழிப்புணர்வு!!

  0
  6
  போலீஸ்

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  42லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. 

   

   

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை போலீசார், 144 தடை உத்தரவை மீறி  வெளியே வரும் பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். சித்ரகுப்தன் மற்றும் எமதர்மராஜா  வேடத்தில் உடையணிந்த போலீசார் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அவர்கள் கழுத்தியில் பாசக்கயிற்றை வீசி கொரோனா பாதிப்பு குறித்து விளக்கி வருகின்றனர்.