“கொரோனா பிடியில் இருந்து போரிஸ் ஜான்சன் நலமாக திரும்பி வருவார்!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

  0
  1
  Boris Johnson

  பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து நலமாக திரும்பி வருவார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

  வாஷிங்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து நலமாக திரும்பி வருவார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

  பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஏழு நாட்கள் தனது டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் சுயமாக தனிமையில் இருந்ததாகவும் மார்ச் 27 அன்று அறிவித்தார். அவர் ஒரு வாரத்தில் குணமடைந்து வெள்ளிக்கிழமை மீண்டும் வெளிவர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் அதிக காய்ச்சல் தொடர்வதால் அவர் வீட்டிலேயே இருப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  ttn

  போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “போரிஸ் என் நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். ஒரு சிறந்த தலைவர். அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் கொரோனா பிடியில் இருந்து நலமாக திரும்பி வருவார் என்று நம்புகிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். அவர் ஒரு வலிமையான மனிதர், வலிமையான நபர்” என்றார்.