கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி- தமிழக அரசு

  0
  2
  கொரோனா வைரஸ்

  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது

  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

  கொரோனாவைரஸ்

  இந்நிலையில் தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் விருப்பப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.