“கொரோனா பாதித்தவர்களை வெறுப்புணர்வோடு பார்க்காதீர்கள்!” – முதல்வர் பழனிசாமி

  0
  2
  coronavirus

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை வெறுப்புணர்வுடன் பார்க்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

  சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை வெறுப்புணர்வுடன் பார்க்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

  கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சில பேர் அலட்சியமாக செயல்படுகின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  coronavirus

  இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “பண்டிகை காலங்களில் மதம் ரீதியான கூட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களை மக்கள் வெறுப்புணர்வுடன் பார்க்காமல், அன்புடனும் பரிவுடனும் நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.