‘கொரோனா பாசிட்டிவ்’..மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆன நபர் : தேடுதல் வேட்டையில் போலீசார்!

  0
  4
  escaped man

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் அரசின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நபர் எஸ்கேப் ஆகியுள்ளார். 

  ttn

  கடந்த 6 ஆம் தேதி கொரோனா அறிகுறியுடன் இவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த 30 வயது ஆன இவரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர் மருத்துவமனையில் இருந்து தப்பித்துச்சென்றதால், இவரின் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவரைக் காணும் நபர்கள் 04146 223265 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.