கொரோனா பணியில் உள்ள செவிலியர் தாய்…கதறி அழுத மகள்: மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன முதல்வர்!

  0
  1
  சோகத்தில் அழும் மகள்

  பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை நெருங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர். 

  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக கொரோனா வார்டில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை நெருங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர். 

  TT

  இந்நிலையில் கர்நாடகா பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் சுனந்தா கொரோனா வார்டில்  பணியாற்றி வருகிறார். இதனால் அவர் வீட்டுக்கு கடந்த மூன்று வாரங்களாக செல்லவில்லை. இதன் காரணமாக அவரது 3 வயது மகள் தாயை  கேட்டு அடம்பிடிக்க, சுனந்தாவின் கணவர் மகளை பைக்கில் சுனந்தா தங்கியுள்ள ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். அப்போது அம்மாவை கண்ட குழந்தை  “மம்மி… வா..” என்று கதறி அழுதது. ஆனாலும் மகள் அருகில் போகமுடியாமல் சுனந்தா தவித்தார். அவரின் தவிப்பு கண்களில் கண்ணீராக வழிந்தது. அப்போது உடனிருந்தவர்களும் அழுதனர். 

  நெஞ்சை உருகவைக்கும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சுனந்தாவை தொடர்பு கொண்டு,  “நீங்கள் தற்போது பார்க்கும் சேவை மக்களுக்கு தேவைப்படுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி, உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று எடியூரப்பா சுனந்தாவிடம் கூறியுள்ளார்.