கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல- ஸ்டாலின்

  0
  1
  ஸ்டாலின்

  இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஸ்டாலின் அதில், எப்படிபட்ட சூழ்நிலையிலும் மக்களை நேரடியாக சந்தித்து பழக்கப்பட்டவன் நான். ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாம் அனைவரும் தனித்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம், அவங்கவங்க வீட்டுல தனிச்சு இருந்தாலே கொரோனாவை விரட்ட முடியும். அதனாலேயே வீடியோ மூலம் உங்களை சந்திக்கிறேன். 

  ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஸ்டாலின் அதில், எப்படிபட்ட சூழ்நிலையிலும் மக்களை நேரடியாக சந்தித்து பழக்கப்பட்டவன் நான். ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாம் அனைவரும் தனித்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம், அவங்கவங்க வீட்டுல தனிச்சு இருந்தாலே கொரோனாவை விரட்ட முடியும். அதனாலேயே வீடியோ மூலம் உங்களை சந்திக்கிறேன். 

  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தை அரசு பயன்படுத்திக்கலாம். மற்ற மாவட்டங்களிலுள்ள அனைத்து திமுக கட்டடங்களும் தயார். மாஸ்க் உள்ளிட்ட தற்காப்பு பொருட்களை திரட்டி மக்களுக்கு வழங்கிவருகிறோம். கொரோனா நேரத்திலும் மக்களோடு மக்களாய் நிர்வாகிகள் நிற்கின்றனர். உதவி செய்யும் நிர்வாகிகளுக்கு நன்றி. கொரோனா உலக பிரச்னை. கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்ற சோதனையை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு பயணர்களை மட்டும் சோதனை செய்தால் போதாது. பரிசோதனை மையங்களை அதிக செய்யனும். கூடுதல் நிதியை ஒதுக்கனும், நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. மிகப்பெரிய சமூக பேரிடர் இது. இதனை அரசும், மக்களும் உணரும்.

  கிராமத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு முறைப்படுத்தனும். உள்ளாட்சி அமைப்புக்கு அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித்தள்ளுங்கள். நோயின் தீவிரத்தை சொல்லி தமிழக அரசு எச்சரித்திருக்க வேண்டும். மெத்தனமாக செயல்படுகிறது. சாதி மத அடிப்படையில் நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்” எனக்கூறியுள்ளார்.