கொரோனா நோயாளிகள் மற்றவர்களை பார்த்து துப்பினால் கொலைமுயற்சி வழக்கு: டிஜிபி எச்சரிக்கை!

  0
  1
   Spitting On Others

  மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அதேபோல் இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  tt

  இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில், கொரோனா பாதித்த பெண்ணை தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் அழைத்துச் சென்றபோது அந்த பெண் அவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  tt

  இதுகுறித்து  கூறிய அம்மாநில டிஜிபி, கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை பார்த்து எச்சில் துப்பினால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படும். எச்சிலை துப்பியதால் அவருக்கு கொரோனா வரும் பட்சத்தில் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.