கொரோனா தொற்று காற்றின் மூலமாக பரவாது – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

  0
  2
  Coronavirus

  கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

  ஜெனீவா: கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உலகில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் 6 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

  who

  இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் தற்போது முக்கியமான ஒரு அப்டேட்டை கூறியுள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருமினாலோ, தும்மினாலோ, பேசினாலோ ஒரு மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் மட்டுமே தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளது. காற்று மூலமாக கொரோனா தொற்று பரவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.