கொரோனா தொற்றால் முதன் முறையாக இந்தியாவில் மருத்துவர் ஒருவர் பலி !

  0
  4
  கொரோனா

  540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக  அதிகரித்துள்ள நிலையில்  473 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  ttn

  இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி  கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியானார். இதன் மூலம், இந்தூரில் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  213 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .