கொரோனா தீவிரம்: ஒடிஷாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு!

  0
  3
  Odisha Extend Coronavirus Lockdown Till April 30

  கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஒடிஷாவில் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ள நிலையில், ஒடிஷா மாநிலம் அதிரடியாக ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா, ஹரியானா, மகாராஷ்டிரா என பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்.

  மேலும் அம்மாநிலத்தில் ஜூன் 17ம் தேதி வரை கல்வி நிலையங்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வரை ஒடிஷாவுக்கு ஒடிஷா வழியாக எந்த ஒரு பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.