கொரோனா : தமிழக ஆளுநர் ரூ.2 கோடி நிதியுதவி!

    0
    1
    பன்வாரிலால் புரோஹித்

    இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.  அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.  அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ttnttn

    இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா  தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கு தலா ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். முன்னதாக  திமுக தலைவர் முக ஸ்டாலின் 1 கோடி, கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 1 கோடி என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என  பலரும்  உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.