கொரோனா தடுப்பு பணியினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சிறுவன்.. நெகிழ்ச்சி சம்பவம்!

  0
  5
  boy

  கொரோனவில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்

  கொரோனவில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள்,காவல்துறையினர், ஊடகத்துறையினர் என அனைவரும் மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளை கொரோனா தடுப்பு பணியினருடன் கொண்டாடிடய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  ttn

  புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சிறுவன் வர்கீஸ். நேற்று இவருக்கு பிறந்தநாள். வழக்கமாக வர்கீஸ் அவரது பிறந்தநாளை முதியோர் இல்லத்திலோ அல்லது மாற்றுத்திறனாளிகள் இருக்கும் காப்பகங்களில் கொண்டாடுவாராம். ஆனால், இந்த முறை அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நம் உயிரைக் காப்பாற்ற பாடுபட்டு வரும் கொரோனா தடுப்பு பணியினருடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

  ttn

  அதனையடுத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார். மேலும், சாலையோரத்தில் வசித்து வருபவர்களுக்கும் பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார். சிறுவனின் இந்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.