கொரோனா தடுப்பு நிதி: ரூ.100 கோடி வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி!

  0
  1
  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

  கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு நாட்டு மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

  கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு நாட்டு மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதற்காக PM CARES என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதனையடுத்து பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு நன்கொடை வாரி வழங்கி வருகின்றனர்.பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண (PM CARES) நிதியத்துக்கு நன்கொடை வழங்க ஆர்வமாக உள்ள குடிமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் pmindia.gov.in என்ற இணையதளத்தை லாகின் செய்து நிதி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  State bank of india

  இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது. மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு 2.56 லட்சம் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தங்களின் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.