கொரோனா தடுப்புக் குழுக்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

    0
    1
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

    கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்க படுமா. இல்லையா என்று மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. 

    ttn

    இது குறித்து நேற்று இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு இருப்பினும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.