கொரோனா சிகிச்சை: விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை பயன்படுத்த முடிவுசெய்த தமிழக அரசு!

  0
  6
  விஜயகாந்த்

  தற்போது விஜயகாந்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு அந்த இடங்களை பயன்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது. 

  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட சோதனை மையங்கள் இல்லாமல் அரசு திணறிவருகிறது. இதை ஈடுசெய்யும் வகையில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு சொந்தமான இடங்களை குறிப்பிட்டு அங்கு போதிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைத்து கொள்ளுமாறு தெரிவித்தது.

  விஜயகாந்த்

  குறிப்பாக விஜயகாந்த், தே.மு.தி.க  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் ,சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். தற்போது விஜயகாந்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு அந்த இடங்களை பயன்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது. 

   

  ttn

  இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று, நேற்று  (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியா, செங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி,  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

  ttn

  தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.