கொரோனா குறித்து கடந்த ஆண்டே கணித்த ஜோதிட சிறுவன்: எப்போது முடிவுக்கு வருமாம் தெரியுமா?

  0
  133
  அபிக்யா ஆனந்த்

  இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. 

  உலகமே தற்போது பேச கூடிய ஒரே பெயர் கொரோனா. உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ள இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. 

  ttmn

  இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த  14 வயது இந்திய சிறுவன்  கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். ஜோதிடம், வானவியல் சாஸ்திரத்தில் கைதேர்ந்துள்ள  அபிக்யா ஆனந்த் என்ற 14 வயது சிறுவன்  
  கடந்த  2019 ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், ‘2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும். மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவ. இதனால் அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். உலகில் நோய்களை பரப்பும்’ என்று கூறியுள்ளார். 

  இந்நிலையில்  கொரோனா பாதிப்பு எப்போது முடிவடையும் என்று சிறுவன்  அபிக்யா ஆனந்த் கணித்துள்ளார். அதில், ‘வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி வரை (நாளை) கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து  மே, 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும். இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் நவம்பரில் முடிவை எட்டும். 

  கொரோனா நோய் பரவாமல் இருக்க, தண்ணீருடன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் என்றும் சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்கலாம்’ என்றும் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.