கொரோனா காற்றில் பரவாது! – ஐ.சி.எம்.ஆர் விளக்கம்

  0
  19
  coronavirus not an airborne

  கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ் பற்றி பலவிதமான பயம் மக்கள் மத்தியில் உள்ளது. கொரோனா வந்த நோயாளி இருமல், தும்மல் மூலம் கொரோனா பரவும் என்று கூறப்படுகிறது. இதனால், காற்றில் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது இல்லை என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழக விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் நிருபர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை சேர்ந்த தொற்றுநோய் ஆய்வாளர் டாக்டர் ராமன் கங்காகேட்கர் கூறுகையில், “கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கு எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லை. கொரோனா வைரஸ் பாதித்தவர் தும்மும்போதும் இருமலின்போதும் வெளிப்படும் நீர்க்குமிழ்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது” என்றார்