கொரோனா எதிரொலி: மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மார்ச் 31 வரை தடை

  0
  2
  mumbai

  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.

  மும்பை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.

  கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. விளையாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

  ttn

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.