கொரோனா எதிரொலி: நீட் தேர்வு தள்ளிவைப்பு!

  0
  1
  Neet exam

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவும் நிலையில், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  Neet

  இந்நிலையில் கொரோனா எதிரொலியாக மே – 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு நடைபெறும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நீட் தேர்வுக்காக இன்று வெளியாகவிருந்த ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடதக்கது