கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண் குழந்தை பிறந்தது!

  0
  2
  குழந்தை

  உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

  baby

  இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் மூலம் மனைவிக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த கர்ப்பிணிக்கு கொரோனா  இல்லாத ஆண் குழந்தை பிறந்தது. தந்தை,தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத குழந்தை பிறந்துள்ளது.