கொரோனா இருப்பதாக வீடியோ பரவியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : மதுரையில் பரபரப்பு!

  0
  2
  crime

  அவர்களுக்கு கொரோனா இருக்குமோ, என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

  கொரோனாவில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கேரளாவில் பணியாற்றி வந்த மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா (35) வீடு திரும்பியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர் தனது தாயார் வீட்டில் தங்கி வந்திருக்கிறார். கேரளாவில் இருந்து வந்ததில் இருந்து இவருக்கும் இவரது தாயாருக்கும் இருமல், சளி இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா இருக்குமோ, என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

  ttn

  அந்த தகவலின் பேரில் முஸ்தபா மற்றும் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அப்பகுதியில் வேகமாக பரவியுள்ளது. முஸ்தபாவையும் அவரது யாரையும் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு கொரோனா இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முஸ்தபா வீடு திரும்பிய பிறகே, அவருக்கு அந்த வீடியோ பற்றி தெரிய வந்துள்ளது. 

  ttn

  அவர் வீடுதிரும்பிய பிறகு அப்பகுதி மக்கள், அவருக்கு கொரோனா இருப்பதாக கூறி வந்ததால் மனமுடைந்த முஸ்தபா, மதுரையில் இருந்து நடந்து சென்று திருமங்கலம் அருகே லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.