கொரோனாவை தடுக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வலைவீசித் தேடும் நெட்டிசன்கள்!

  0
  18
  Madurai Aiims

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டது. கடைசியில் மதுரையில் அமைப்பது என்று முடிவானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் சுற்றச் சுவர் கட்டும் பணியே முடியவில்லை என்று மதுரை மக்கள் கூறி வருகின்றனர்.

  madurai-aiims-89

  இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கொரோனா பாதிப்பை தவிர்க்கும் என்95 போட்டுக்கொள்ள, கொரோனா நோயாளிகளை எதிர்கொள்ளும் மருத்துவர்களுக்கு சாதாரண மாஸ்க் வழங்கப்படுகிறது. அதிலும் கொஞ்சம் துறைத் தலைவர் அளவில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் துணி மாஸ்க் வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு இடம் தேடி அரசுகள் அலைகின்றன.
  இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்களின் குமுறலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாறியுள்ளது. மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “சீனா 10 நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கொரோனாவை தடுக்க கட்டியது.

  ஓராண்டுக்கு முன் மோடி அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல் கிடைக்காததால் தமிழகம் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. வாழ்க பாரம்” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய பதிவுகளை வெளியிட்டு தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.