கொரோனாவில் இருந்து குணமான 74 வயது மூதாட்டி.. மகிழ்ச்சியுடன் அனுப்பிவைத்த மருத்துவக்குழு!

  0
  4
  grandma

  பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக இருந்த நிலையில், மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 738 ஆக அதிகரித்தது.

  தமிழகத்தில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று காலை 690 ஆக இருந்த நிலையில், மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 738 ஆக அதிகரித்தது. கொரோனாவில் இருந்து இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், முதியவர்களும் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.   

  ttn

  அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயும் இருந்தும் அவர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பியிருக்கிறார். அவரது புகைப்படத்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த மூதாட்டியை மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.