கொரோனாவின் கோரத்தாண்டவம்..1 வயது குழந்தை உயிரிழப்பு !

  0
  5
  baby

  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

  கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தையடுத்து, அதிக அளவு பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

  ttn

  குஜராத்தின் ஜாம்நபர் என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியின் ஒரு வயது ஆண்குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஜாம்நபர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.