கொரோனாவின் கோரத்தாண்டவம்: இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய மார்க்கெட்டிலும் பரவியது!

  0
  1
  வெங்காய மார்க்கெட்

  கொரோனா வைரஸால் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்குகிறது.

  உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் சுமார் 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

  ttn

  இந்நிலையில் இந்தியாவின் வெங்காய மார்கெட்டான நாசிக் மார்க்கெட்டிலும் கொரோனா பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த வெங்காய மூட்டைகளின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது வெங்காய மூட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

  ttn

  இந்த இடத்துக்கு ரொட்டி சப்ளை செய்யப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மார்க்கட்டுக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என்றும் யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய் கிழமை(நாளை) பரிசோதனை செய்து முடித்த பிறகே, வெங்காயங்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.