கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்த 35 லட்சம் தின கூலி தொழிலாளர்களுக்கு நிதியுதவி…. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

  0
  11
  தினசரி கூலித் தொழிலாளர்கள்

  உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரசுடன் தொடர்புடைய பொருளாதார மந்த நிலையால் வேலைவாய்ப்பை இழந்த 35 லட்சம் தின கூலி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா வைரஸால் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் வீட்டை வெளியே தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் தொழில் நடவடிக்கை குறைந்து விட்டதால் பல நிறுவனங்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன. பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் நிறுவனத்தை தற்காலிகமாக மூடி விட்டன.

  முதல்வர் யோகி ஆதித்யநாத்

  இதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியா பல கோடி தினசரி கூலி பணியாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பொருளாதார மந்தநிலையால் வேலை வாய்ப்பை இழந்த 35 லட்சம் தினசரி கூலி தொழிலாளர்களுக்கு  நிதியுதவி வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. 

  தினசரி கூலித்தொழிலாளர்கள்

  கூலித் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படும் எனவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச அரசுதான் முதலாவதாக அமைப்பு சாரா துறையை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கர்நாடக அரசும் இது போன்ற அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் முறைகள் மற்றும் மாநிலத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு எந்த அளவிற்கு உதவி அளிக்கும் என்பதை அடையாளம் காணுமாறு அம்மாநில தொழிலாளர் துறையிடம் கேட்டுள்ளது.