கொரோனாவால் முடங்கிய சீனா…பலி எண்ணிக்கை 1,483 ஆக உயர்வு!

  0
  1
  கொரோனா

  மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்  நடந்த  கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு கொவைட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

  கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

  ttn

  இதுகுறித்து கூறியுள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ்  உலகநாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்  நடந்த  கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு கொவைட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

   

  corona

  இந்நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸுக்கு  மேலும் 116 பலியாகியுள்ளனர். சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் பலி  எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.