கொரோனாவால் பாதித்த நபரின் மனைவி, மகளுக்கும் கொரோனா உறுதி!

  0
  2
  corona virus

  டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது

  டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. அதில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் தங்கியிருந்த 16 நபர்களுள் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் மத்திய அரசின் கல்வி நிறுவனம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சமையல் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானது. இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வசிக்கும் நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

  ttn

  அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகளுக்கும் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.