கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது!

  0
  4
  போரிஸ் ஜான்சன்

  அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதில் உலகின் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதில் உலகின் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

   

  TT
  முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததோடு அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.  இதையடுத்து அவரது  உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சாதாரண வார்டிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

  போரிஸ் ஜான்சன்

  இந்நிலையில், போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக இருப்பதாக பிரதமர்   அலுவலகம் தெரிவித்துள்ளது. “கொரோனா அறிகுறி மோசமடைந்ததால், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். ஆனால், அவர் நல்ல மனஉறுதியுடன் உள்ளார் என்று இயல்பாக சுவாசிக்கிறார். விரைவில் மீண்டு வருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.