‘கொரோனாவால் நாம் உயிரிழக்க நேரிடும்’.. வீதி நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்!

  0
  1
  police

  கொரோனா மாஸ்க் அணிந்தும், கொரோனா பற்றி பேசியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

  கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. மக்கள் வீட்டிலேயே இருந்தாலும், அத்தியாவசிய தேவைக்களுக்கு வெளியே சென்று தான் ஆக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதனிடையே கொரோனா அபாயம் புரியாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். 

  ttn

  இது ஒருபுறமிருக்க, பல போலீசார் ஆங்காங்கே கொரோனா மாஸ்க் அணிந்தும், கொரோனா பற்றி பேசியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல, மதுரையில் தேவையில்லாமல் வெளியே வரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக போலீசார் நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த நாடகத்தின் மூலம், மக்கள் அரசின் விதிமுறையை பின்பற்றவில்லை என்றால் மருத்துவர்கள், போலீசார் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவி, நாம் எல்லாரும் உயிரிழந்து விடுவோம் என்று மக்களுக்கு உணர்த்தியுள்ளனர்.