கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது… ஒரே நாளில் 69 பேர் பலி…

  0
  3
  உயிர்பலி

  கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று மட்டும் தொற்று நோய்க்கு 69 பேர் பலியாகி உள்ளனர்.

  தொற்று நோயானா கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.

  கொரோனா வைரஸ்

  நேற்று மட்டும் கொரோனா வைரசுக்கு 69 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 31 பேர் பலியாகி உள்ளனர். அடுத்து குஜராத் (19), மத்திய பிரதேசம் (10), உத்தர பிரதேசம் (3), ராஜஸ்தான் (2), ஜம்மு அண்டு காஷ்மீர் (2), கர்நாடகா (1) மற்றும் தமிழ்நாடு (1) ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

  பொதுமக்களுக்க மருத்துவ பரிசோதனை

  நகரங்கள் அடிப்படையில் பார்த்தால் நேற்று கொரோனா வைரஸால் மும்பையில் அதிகளவில் உயிர் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. மும்பையில் நேற்று மட்டும் தொற்று நோய்க்கு 25 பேர் பலியாகி உள்ளனர். அடுத்து குஜராத் அகமதாபாத் நகரில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.