கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…..

  0
  4
  மூத்த குடிமக்கள்

  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 19 சதவீதம் பேர்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆனால் கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 63 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

  மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். இதில் 63 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 19 சதவீதம்தான். ஆனால் உயிர்பலியில் மூத்த குடிமக்கள்தான் அதிகளவில் உள்ளனர்.

  மூத்த குடிமக்கள்

  கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் வயது அடிப்படையில் பங்களிப்பு
  60 வயதுக்கு மேல்         63 சதவீதம்
  40 முதல் 60 வயது        30 சதவீதம்
  40 வயதுக்கு குறைவு    7 சதவீதம் 

  பெண்-ஆண்

  பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உயிர் இழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்கள்தான். 24 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். அதேபோல் கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். அதேசமயம் உயிர் பலியானவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள்.