கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம்!

  0
  1
  கொரோனா தொற்று

  அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

   சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  ttn

   ஈகுவடாரில் குவாயாகுயில் நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால்  நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றன. போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், பலர்  வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இருப்பினும் உயிரிழப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. 

  ttn

  இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வீதிகளில் நெகிழி பைகள் மூலம் சுற்றி வீசியுள்ளனர். ஒரு சிலர் வீடுகளிலும், மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்தபோதும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.