கொடைக்கானல் மலைப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

  0
  1
  காட்டுத்தீ

  உலகமே கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென் த‌மிழ‌க‌த்தின் உய‌ர‌மான‌ ம‌லைச்சிக‌ர‌மான கொடைக்கானல் பெருமாள்ம‌லை ச‌ரிவுக‌ளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. உப்புப்பாறை, மெத்து கிராம‌ம் அருகே உள்ள‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ளுக்குள் தீ ப‌ர‌வாம‌ல் த‌டுக்கும் ப‌ணிக‌ளில் வ‌ன‌த்துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வில்ப‌ட்டி கிராம‌ பகுதிகளில் உள்ள புத‌ர்க‌ளிலும் காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது.

  ttn

  இந்த காட்டுத்தீ மேலும் பரவி அங்கிருக்கும் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டதை போல இங்கும் நடக்கக் கூடாது என்றும் பரவி வரும் காட்டுத்தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருமாறும் வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.