கொடுமைப்படுத்திய காதல் கணவன்; தாய் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்: கணவனுடன் வாழ சொன்னதால் எடுத்த விபரீத முடிவு!

  0
  2
  தற்கொலை

  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கார்த்திகா வீட்டில் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.

  கரூர் மாவட்டம் கிருஷ்ணா ரெட்டி ஊரை சேர்ந்த சதீஷ் குமார் இவர் வடபாகம் அக்ரஹாரத்தை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கார்த்திகா வீட்டில் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.

  ttn

  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் அவரின் குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாக கார்த்திகா தாய் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து கார்த்திகாவை கணவன் வீட்டில் சென்று வாழுமாறு கூறியுள்ளனர். அதேபோல் இருவீட்டாரும் கூடி பேசி கார்த்திகாவை கணவன் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

  ttn

  இதனால் மனமுடைந்த கார்த்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கார்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.