கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த அனுராதாவுக்கு உதவுங்கள் : வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்!

  0
  1
  Vanathi srinivasan

  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்த பெண், தனது வீட்டிற்கு உதவுவதற்காகச் சிறிது நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

  சில நாட்களுக்கு முன்பு, கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில், அனுராதா என்ற பெண் லாரி மீது மோதியதால் அந்த பெண் கால் மீது லாரி ஏறியது. இதனால், அந்த பெண்ணுக்கு ஒரு காலை எடுத்துவிட்டனர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்த பெண், தனது வீட்டிற்கு உதவுவதற்காகச் சிறிது நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

  Anuradha

  அனுராதாவின் குடும்பத்தினர் அவர்களிடம் இருந்த பணத்தை வைத்து இப்போது வரை அவருக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு மேல் மருத்துவம் பார்க்க போதிய பண வசதி இல்லாததால் பொது மக்களிடம் பண உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். 

   

  இது குறித்து பா.ஜ.க வானதி ஸ்ரீனிவாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சாதாரண குடும்பத்தின் சம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது…கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாகக் கூறியுள்ளார். அதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பெண்ணிற்கு உதவவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.