கொஞ்சம் கொஞ்சமாக நகைக்கடையில் 1 கிலோ தங்கம் திருடிய ஊழியர்.. கையும் களவுமாக பிடித்த ஓனர் !

  0
  2
  தங்கம் திருடிய ஊழியர்

  இவர் கடந்த ஒரு ஆண்டாக விடுமுறை கூட எடுக்காமல் அந்த கடையில் வேலை செய்து வந்துள்ளார். 

  கடலூர் மாவட்டம் திருப்பதிரிப்புலியூரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கலைச்செல்வன் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் கடந்த ஒரு ஆண்டாக விடுமுறை கூட எடுக்காமல் அந்த கடையில் வேலை செய்து வந்துள்ளார். 

  ttn

  கொஞ்ச நாட்களாக ரொம்ப சின்சியராக வேலை பார்த்து வருவது போல  கலைச்செல்வன் பாவனைக் காட்டி வருவதை அறிந்த நகைக்கடை உரிமையாளர், அவர் மீது இருந்த சந்தேகத்தில் கடையில் உள்ள நகைகளை சோதனை செய்துள்ளார். அதில், ஒரு கிலோ தங்கம் கணக்கில் குறைவதை கண்டு பிடித்துள்ளார். இது குறித்து உரிமையாளர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், கலைச் செல்வனை பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  ttn

   அதில், கடந்த ஒரு ஆண்டாக கொஞ்சம் கொஞ்சமாக கடையில் இருந்து நகைகளை திருடி சென்று,  கூத்தப்பாக்கம் என்னும் பகுதியில் உள்ள பைனான்ஸ் கடையில் அடகு வைத்து பணம் வாங்கிக் கொண்டு வந்ததாகவும், அந்த பணத்தில் பைக், டிவி என வாங்கிக் குவித்து ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த பைனான்ஸ் கடைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த 97 சவரன் நகைகளை மீட்டதோடு, கலைச் செல்வனின் பைக், டிவி ஆகிய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.