கொச்சை வார்த்தையில் தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்க தமிழ்ச்செல்வன் : டிடிவி வீட்டில் அவசர ஆலோசனை!

  0
  2
  TTV Dinakaran

  அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறித்து  பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

  அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறித்து  பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

  அதிமுகவிலிருந்து  பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய டிடிவி  தினகரனுடன் ஆரம்ப முதலே இருந்து வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். எவ்வளவு பெரிய இடர்பாடுகள்  வந்தபோதும் அவருடன் இருந்த தங்க தமிழ்செல்வன்,  தற்போது தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  ttv

  இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள தங்கத்தமிழ் செல்வன், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். நான் நேர்மையானவன். சில விஷயங்களை மாற்ற வேண்டும், சரிபண்ணுங்கள் என்று சொன்னேன். அதைக் கண்டிக்காமல், சமூக வலைத்தளங்களில் தவறானச் செய்தியை வெளியிடும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. என்னை கட்சியிலிருந்து நீக்கி இருக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு என்னை குறித்து அவதூறு பரப்புவது ஏன்? துன்று கேள்வி எழுப்பியுள்ளார். 

  thangam

  இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரத்தின் எதிரொலியாக  டிடிவி தினகரன் தேனி மாவட்ட நிர்வாகிகளோடு தனது இல்லத்தில் ஆலோசனையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.