கேலி செய்த சக மாணவர்கள்: தற்கொலை செய்துகொண்ட 14 வயது சிறுமி!

  0
  1
  தனப்ரியா

  14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . 

  திருச்சி: 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . 

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஓந்தாம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல். விவசாயியான இவரின் மகள்  தனப்ரியா அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்,  ஒன்பதாம்  வகுப்பு  படித்து வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பின் இறுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் பள்ளி  தொடங்கிய முதல் நாள் தனப்பிரியா மீண்டும் பழைய வகுப்பிலேயே சென்று அமர்ந்துள்ளார். இதைக் கண்ட சகமாணவர்கள்  அவர் தோல்வியடைந்ததை வைத்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. 

  suiicde

  இந்நிலையில் ரம்ஜான் விடுமுறை முடிந்து மறுநாள் பள்ளிக்கு செல்ல தனப்ரியா  மறுத்துள்ளார். ஆனால் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் சென்ற அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

  police

  இதையடுத்து தனப்ரியாவின் தந்தை  தந்தை மணிவேல் அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.