கேரளத்தில் 87 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கிய தமிழர்!

  0
  1
  K-Abdullah

  தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் மணி என்கிற அப்துல்லா, 1982-ல் புளியங்குடியிலிருந்து கொல்லத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கே கடைக்கல் என்கிற இடத்தில் ஒரு நிலக்கடலை விற்பனை செய்யும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

  தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் மணி என்கிற அப்துல்லா, 1982-ல் புளியங்குடியிலிருந்து கொல்லத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கே கடைக்கல் என்கிற இடத்தில் ஒரு நிலக்கடலை விற்பனை செய்யும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

  கடும் உழைப்பாளியான அப்துல்லா சில ஆண்டுகளிலேயே தனியாக தள்ளுவண்டியில் வைத்து வேற்கடலை விற்கும் தொழிலைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து அதே கடக்கல் பகுதியில் ‘பிராண்ட் நியூ’ என்ற பெயரில் ஃபேன்ஸி ஸ்டோர் திறந்தார். சொந்த ஊரான புளியங்குடியிலும் புதிய தொழில்களை துவங்கி நல்ல நிலைக்கு உயர்ந்தார் அப்துல்லா.

  இந்த நிலையில் தன் வளர்ச்சிக்கு உதவிய மக்களுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்று அப்துல்லா நினைத்தார். இதுபற்றி,இப்போதைய கடக்கல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் பிஜுவை அனுகி தனது விருப்பத்தை வெளியிட்டார்.அவர் அந்தப் பஞ்சாயத்தில் இருக்கும் தேவைகளை அப்துல்லாவிடம் விவரித்தார்.அவற்றில் வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அப்துல்லாவுக்கு பிடித்திருந்தது.இதைத்தொடர்ந்து அருகிலுள்ள கோட்டபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை 10 லட்சரூபாய் கொடுத்து அப்துல்லா விலைக்கு வாங்கி இருக்கிறார் அப்துல்லா. கடக்கல் பஞ்சாயத்துக்கு வழங்க இருக்கும் அந்த நிலத்தில் 87 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்போகிறது பஞ்சாயத்து நிர்வாகம்.

  அடுத்த வாரம் நடக்க இருக்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அப்துல்லா அந்த நிலத்தை வழங்குவார் என்றும், அதைத் தொடர்ந்து 87 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்பணி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.