கேம் விளையாடி கண்ணை கெடுத்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்!

  0
  4
  biggboss

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை காஜல், அதிகமாக கேம் விளையாடி கண் பார்வையை கெடுத்துக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை காஜல், அதிகமாக கேம் விளையாடி கண் பார்வையை கெடுத்துக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும், ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

  biggboss

  அதேசமயம், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல், சமீப காலமாக ட்விட்டர் பக்கங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை. இது பற்றி அவரது ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு காஜல் பதிலளித்துள்ளார்.

  அவரது ட்வீட்டில், மொபைல் கேம் விளையாடி கண் பார்வை காலியாகிடிச்சு. மொபைலை தொடக்கூடாதுன்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லிட்டார் என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், காஜலுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.