கேண்டிட் போட்டோ கொடுமைகள்…ஆற்றுக்குள் கவிழ்ந்த தம்பதி; புது ஐடியாவாம்-வைரல் வீடியோ!

  0
  10
  ஆற்றுக்குள் விழுந்த தம்பதி

  திருமணத்தின் போது வித, விதமான புகைப்படங்களை எடுக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். 1998-களில் மெல்ல நம்மை ஆட்கொண்ட டிஜிட்டல் புரட்சி, திருமணப் புகைப்படங்களையும் விட்டு வைக்கவில்லை

  திருவனந்தபுரம்: திருமண புகைப்படம் எடுக்கும் போது தம்பதி ஒன்று படகில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  நினைவுகளை நினைவூட்டும் மிகப்பெரிய பொக்கிஷங்கள் புகைப்படங்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. தற்போது செல்ஃபி காலம் என்பதால், புகைப்படங்களை எடுத்து தள்ளி வருகின்றனர் இன்றைய இளசுகள். ஆனால், 80’ஸ் கிட்ஸுக்கோ பள்ளி காலத்தில் எடுத்த ஒரு குரூப் போட்டோ இன்றும் மனதில் நிழலாடும். அதனை எடுத்து அவ்வப்போது லேசாக வருடி பார்த்து, பின்னர் மீண்டும் பெட்டியில் வைத்து அடைத்து விடுவார்கள்.

  photo

  முந்தைய கால திருமணங்களில் புகைப்படங்களே இருக்காது. ஆனால், 1990-களில் நடந்த  பெரும்பாலான திருமணங்களில் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இயற்கை காட்சிகள் அருகே மணமக்கள் நிற்பது, கைகளை பிடித்துக் கொண்டு மணமக்கள் நிற்பது, மணமகனை பார்த்து மணமகள் ரசிப்பது, மணமகளின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு மணமகன் நிற்பது என அடுத்தடுத்த ஆண்டுகளில் திருமணப் புகைப்படங்கள் வளர்ச்சி அடைந்து வந்தன.

  photo

  ஆனால், இன்றைய செல்ஃபி காலகட்டத்தில் அனைவரது கையில் இருக்கும் செல்போன்களும் விதவிதமான போட்டோக்களை எடுத்து தள்ளுகிறது. இதனால், திருமணத்தின் போது வித, விதமான புகைப்படங்களை எடுக்க அனைவரும் ஆசைப்படுகின்றனர்.

  photo

  1998-களில் மெல்ல நம்மை ஆட்கொண்ட டிஜிட்டல் புரட்சி, திருமணப் புகைப்படங்களையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக, 2008-ஆம் ஆண்டுக்கு பின்னர், திருமணப் புகைப்படங்களில் மெல்ல, மெல்ல கேண்டிட் போட்டோகிராஃபி ஊடுருவியது. இதற்காக பல மெனக்கெடல்களும் நடைபெறுகின்றன.

  photo

  Pre Wedding Photography என பெயர் வைத்து திருமணத்திற்கு முன்பே இப்போதெல்லாம் போட்டோ எடுக்கக் தொடங்கி விட்டனர். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்படும் சாதாரண புகைப்படங்கள் மற்றும் கேண்டிட் புகைப்படங்கள் தவிர, திருமணத்துக்கு பிந்தைய போட்டோ ஷூட் தொடங்கி கர்ப்பமாவது, குழந்தை பிறப்பது என நீட்சியாக அது சென்று கொண்டிருக்கிறது. கடலில் இருந்து ஓடி வருவது, மணமகளை அலேக்காக தூக்குவது, கர்ப்பமான மனைவியின் வயிற்றில் இதயம் போன்று கைகளை வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது என பல போட்டோக்களை நாம் கண்டிருப்போம்.

  photo

  லட்சகணக்கில் செலவாகும் இந்த மாதிரியான போட்டோக்களை எடுக்க வசதி இல்லாதவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சில சண்டைகள் அரங்கேறியிருக்கலாம் என்பது தனிக்கதை. எனினும், இந்த மாதிரியான போட்டோக்களை எடுப்பவர்கள் விட்ட பாடில்லை. அண்மையில், புகைப்பட கலைஞர் ஒருவர் திருமண போட்டோ ஷூட்டின் போது, மரத்தில் தொங்கியபடி எடுத்த புகைப்படம் வைரலானது.

  Kerala photo

  அந்த வகையில், கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஒன்று திருமணத்துக்கு முந்தைய கேண்டிட் போட்டோ ஷூட்டின் போது, ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Kerala photo

  கேரளாவை சேர்ந்த டிஜின்-ஷில்பா தம்பதி, வருகிற மே மாதம் 6-ம் தேதி நடக்கவிருக்கும் தங்களது திருமண போட்டோக்களை எடுக்க Weddplanner Wedding Studio எனும் நிறுவனத்தை அணுகியுள்ளனர். திருமணத்துக்கு போட்டோ எடுக்கவிருக்கும் அவர்கள், அதற்கு முந்தைய கேண்டிட் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இதற்காக, ஆற்றுக்குள், மார்பளவு ஆழம் கொண்ட தண்ணீர் ஓடும் இடத்தில், சிறிய படகு ஒன்றில் தம்பதியை அவர்கள் உட்கார வைத்துள்ளனர்.

  மேலும், சுற்றி இருக்கும் புகைப்பட நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஆற்றில் இருக்கும் தண்ணீரை மேல் நோக்கி தெளித்து செயற்கையாக மழை சாரல் விழுவது போன்றும், அப்போது, வாழை இலை ஒன்றை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு மணமக்கள் ஒருவரை ஒருவர் ரொமான்டிக்காக பார்த்துக் கொள்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டு கேண்டிட் போட்டோ எடுத்துள்ளனர். ஆனால், எதிர்பாரா விதமாக பிடிமானம் தவறி புதுமணத் தம்பதி ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

  இந்த வீடியோவை தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, லைக்ஸ்களை குவித்து வரும், Weddplanner Wedding Studio நிறுவனத்தினர் இது குறித்து கூறுகையில், “படகை கவிழ்த்து விடுவது என்பது எங்களது யோசனையே. அது தொடர்பாக தம்பதிக்கு தெரியாது. இந்த யோசனையை எங்களது நிறுவனரும், தலைமை புகைப்படக் கலைஞருமான ராய் லாரன்ஸ் திடீரென கொடுத்தார். இதையடுத்து, ஹூட்டிங்கின் போது, எங்களது குழுவினர் படகை கவிழ்த்து தம்பதியை ஆற்றுக்குள் விழ செய்து புகைப்படம் எடுத்தனர்” என விளக்கமளித்துள்ளனர். அடேய்களா..இப்படியுமா பண்ணுவீங்க!!

  இதையும் வாசிங்க

  அடிக்கடி உங்கள் முகம் கருத்துப்போகிறதா…கவலைப்படாதீங்க: இதை ட்ரை பண்ணினால் போதும்!